Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 28, 2023

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (GENERAL INSURANCE CORPORATION OF INDIA) நிறுவனத்தில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க 12-ம் தேதி கடைசி நாள்.

பணி விவரம்

உதவி மேலாளர் (ஸ்கேல் 1)

இந்தி, பொது, ஸ்டாடிடிக்ஸ், பொருளாதாரம், காப்பீட்டு துறை, பொறியியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகங்களிலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நியமனம் செய்யப்படுவர்.

மொத்தப் பணியிடங்கள் - 85

கல்வித் தகுதி:இந்தி பிரிவிற்கு மொழிபெயர்ப்பு தெரிந்திருக்க வேண்டும். பொது மேலாளர் பணிக்கு எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும்.
STATISTICS பணிக்கு சம்பந்தப்பட்ட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சட்டப் பணிக்கு LLM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மனிதவள மேலாளர் பணிக்கு HRM / Personnel
Management படித்திருக்க வேண்டும்.
ஐ.டி. பணிக்கு /B.E. CSE, ECE, IT,ETC ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு, 01.10.2023 அன்று 21- 30 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். (Scale 1 - 50925 -2500(14) – 85925 -2710(4) -96765 )

முக்கிய நாட்கள்

விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 12.01.2024

கணினி வழி எழுத்துத் தேர்வு: பிப்ரவரி மாதம்

ஆன்லைன் தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பில் தளர்வு உள்ளிட்ட பல கூடுதல் தகவல்களுக்கு https://www.gicre.in/images/FINAL_ADVERTISEMENT_FOR_2023_RECRUITMENT_22122023.pdf - என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா?

இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நாளை முதல் (27.12.2023) விண்ணப்பிக்கலாம்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்ஜூனியர் உதவியாளர் (Fire Service) - 73
ஜூனியர் உதவியாளர் (Office) - 2
சீனியர் உதவியாளர் (Electronics) - 25
சீனியர் உதவியாளர் (Accounts) - 19

மொத்த பணியிடங்கள் - 119

கல்வித்தகுதி:ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு 10 வது / 12-வது தேர்ச்சியுடன் மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் உதவியாளர் ஆபிஸ் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சீனியர் உதவியாளர் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ரேடியோ பொறியியல் ஆகிய துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை . .

எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பு

SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ] Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles ஆகிய பணியிடங்களுக்கான 26,146 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News