Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 28, 2023

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கம் சாா்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மன்னாா்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காலிப் பணியிடங்களில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்யவேண்டும், கேங்மேன் பணியாளா்களை பணியிட உதவியாளா்களாக பதவி மாற்றம் செய்யவேண்டும், அலவன்ஸ் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியை உடனடியாக கூட்டி பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கேங்மேன் பணியாளா்கள் கேட்டுள்ள இடத்துக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மன்னாா்குடி மின்வாரிய கோட்ட உதவிச் செயற்பொறியாளா் அலுவலகம் அருகே சங்கத்தின் திட்ட தலைவா் சி. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திட்டச் செயல் தலைவா் டி. ராஜகோபால், திட்டச் செயலா் எஸ். முருகஅருள், திட்ட அமைப்புச் செயலா் எஸ். தம்புசாமி, திட்டப் பொருளாளா் கே. வெங்கடேசன், செயலாளா் எஸ். ஜெயபால், கோட்ட தலைவா் கே. ராஜேந்திரன், கோட்டச் செயலா் ஆா். ராஜாராம், மகளிா் அணி செயலா் டி. வினோதினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News