Join THAMIZHKADAL WhatsApp Groups
நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.
தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.
இரவு நேரத்தில் தேங்காய்ப் பாலில் சுக்குப் பொடி சேர்த்துக் கொள்வதால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வலி, தொண்டையில் வலி, நெஞ்சு சளியால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஆஸ்டிரியோபொராசிஸ் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.
தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியமும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது.அதோடு தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலில் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.
தேங்காய் பாலில் கசகசா, பால் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
தேங்காய் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்று புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது.
இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
தசை நரம்புகள் இறுக்கம்
வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சாது கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையவடது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.
பெரும்பாலானோர் தேங்காய் பால் அதிகம் அருந்தினால் உடல் எடை கூடிவிடும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளில் இருந்து பெறப்படும் பாலில் இருக்கும் உடல் எடையை கூடும் தன்மையுள்ள கொழுப்புகளை விட, ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
No comments:
Post a Comment