சென்னையை புரட்டி போட்ட மிக்காம் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நடைபெற இந்த அரையாண்டு தேர்வுகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில் தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளை 18.12.2023 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் திங்கள் கிழமையான நாளை நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கணித பாடம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளும் நடைபெற அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்காக மாணவர்கள் அனைவரும் தீவிரமாக படித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழை பெய்ததற்காக அரையாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது போல் நாளை ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தமிழக முழுவதும் இத்தேர்வுகள் வெற்றி வைக்கப்படுமா அல்லது குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் ஒத்தி வைக்கப்படுமா? என்பது குறித்து மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர் .
விரைவில் இதுகுறித்து முறையான அறிவிப்பு பள்ளி கல்வித்துறை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment