Join THAMIZHKADAL WhatsApp Groups
கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறி, நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வெளியே வந்த மாணவிகள், பெற்றோருடன் ராஜவீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வெரைட்டிஹால் சாலை போலீஸார் மற்றும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
No comments:
Post a Comment