Join THAMIZHKADAL WhatsApp Groups
2023-2024ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு 13.12.2023 முதல் 22.12.2023 முடிய ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் 18.12 : 2023,19.12.2023 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக திட்டமிட்டபடி தேர்வினை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது . தற்போது பள்ளி 02.01.2024 அன்று திறக்க உள்ள நிலையில் விடுபட்ட இரண்டாம் பருவத் தேர்வுகளை இணைப்பில் கண்ட அட்டவணையின்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / ஆசிரியர்களுக்கும் இத்தகவலைத் தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கும் தெரிவித்து குறித்த நாளில் பருவத் தேர்வு நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : - தேர்வு அட்டவணை
2nd Term Exam Proceedings and Timetable - Download here
No comments:
Post a Comment