2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் அறிவிக்கை எண் .1 / 2023 , நாள் .05.06.2023 ன் படி 04.12.2023 அன்று நடைபெற இருந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் பணிநாடுநர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இச்சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது வருகின்ற 14.12.2023 அன்று நடைபெறும் என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பணிநாடுநர்கள் 04.12.2023 அன்று நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தினையே 14.12.2023 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பயன்படுத்தலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment