ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்டஇயக்குநர் எம்.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் செயல்திறன், அணுகுமுறை, திறன்கள் உட்பட ஒட்டுமொத்த செயல்பாடுகளின் முன்னேற்றத்தை அறிந்துகொள்ளும் வகையில் மேம்படுத்தப் பட்ட தரநிலை அட்டை (ரிப்போர்ட் கார்டு) வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த அட்டையில் மாணவர்களின் செயல்திறன்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் விவரங்கள் எமிஸ் தளத்தில்ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்படும். அதன்படி, 20,47,568 மாணவர்களுக்கு தரநிலை அட்டைகள் அச்சிட்டுவழங்குவதற்காக ரூ.1.02 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment