Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 28, 2024

இனி மருத்துவமனைகளில் ₹1 கூட முன்பணம் செலுத்த வேண்டாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவச் செலவுகள் விண்ணைத் தொட்டு வரும் இந்நாளில், மருத்துவக் காப்பீடுத் துறையில் ஒரு புதிய பாய்ச்சலை IRDAI (காப்பீடுகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் மையம்) தொடங்கி வைத்துள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள ஆயுட் மற்றும் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் அனைத்தும் இனிவரும் காலங்களில் 100% பணமில்லா சிகிச்சையைப் பெற முடியும் .

பொதுவாக, நாம் மருத்துவ காப்பீடு செய்த நிறுவனங்கள் சில மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் (Empanelled Hospitals) மட்டும் பணமில்லா சிகிச்சையைப் பெற முடியும். எனவே, பயனானிகளில் இந்த வகை மருத்துவமனைகளுக்குத் தான் முன்னுரிமை கொடுத்து வந்தனர். இணைக்கப்படாத இதர மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், முன்னதாக பணம் செலுத்தி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பின்னர், மருத்துவச் செலவிற்கான ஆவணங்களை காப்பீடு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் . காப்பீடு நிறுவனத்தின் அதிகாரி ஒப்புதல் அளித்த பிறகு, முன்னர் செலுத்திய பணத்தை திரும்ப (Reimbursement) பெற்றுக் கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனங்களுடன் மருத்துவமனைகளுக்கு ஒப்பந்தம் இருந்தாலும்/இல்லாவிட்டாலும் பணமில்லா சிகிச்சை பெற முடியும்.

ஆனால், தற்போது ஆயுட் மற்றும் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் 100% பணமில்லா சிகிச்சை முறையை அறிமுகபடுத்தியுள்ளன. இதன்மூலம், மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை வைத்துள்ள பாலிசிதாரர்கள் எந்தவொரு மருத்துவமனையிலும் முன்பணம் செலுத்தாமல் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, மருத்துவ செலவுகளை , மருத்துவமனையிடம் நேரடியாக மருத்துவமனையில் கொடுத்து விடுவார்கள்.

இந்நடவடிக்கையின் மூலம், நுகர்வோரின் பாதுகாப்பு, மகிழ்ச்சி அதிகரிக்கப்படும் என்றும் நேரத்தை மிச்சப்படுத்தவும், எழுத்து மற்றும் தேவையற்ற நிர்வாக இடர்பாடுகளை களையவும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் IRDAI தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News