Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 1, 2024

தேசிய திறந்தநிலை பள்ளி 10, 12-ம் வகுப்பு சான்றிதழ் அரசு பணிக்கு உகந்ததல்ல

பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜே.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை:

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ், அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு உகந்ததல்ல என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பரிந்துரை செய்தது.

தீவிர பரிசீலனைக்கு பின்னர் அதை ஏற்க தமிழக அரசு முடிவெடுத்தது.

அதன்படி தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக்கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானதல்ல. அதனால், தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு பெற்றோர், மாணவர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News