Join THAMIZHKADAL WhatsApp Groups
வரும் 12ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட உள்ள நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான காலி பணியிட எண்ணிக்கை 5990 ஆக உயர்ந்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலிப் பணியிடங்கள் குறித்து முதலில் அறிவிப்பு வெளியான போது, குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள்) பணியிடங்களில் 116 இடங்களும், குரூப் 2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணியிடங்களில் 5, 413 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிதாக சில இடங்களை சேர்த்து கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது.
இருப்பினும், குரூப்-2, 2ஏ பதவிகளில் மொத்தம் எத்தனை இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற விவரங்கள் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், இதுவரையில் அறிவிக்கப்படாத தேர்வு முடிவுகள் குறித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த குரூப்-2, 2ஏ அறிவிப்பில், 5 ஆயிரத்து 777 இடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்ற அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று நேற்று வெளியாகியது. அதில் குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment