Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொங்கல் விடுமுறை ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் பரிசீலனை செய்து விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment