Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 19, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2024

சேரர்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

விளக்கம்:

 ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

பழமொழி :

Look before you leap

ஆழம் தெரியாமல் காலை விடாதே

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா 

2. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சேர அரசர்கள் 

English words & meanings :

 knack - an acquired or natural skill for doing something. சாமர்த்தியம். kayak – a different type of boat used mainly by Inuit people or Eskimos. . வட துருவ எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் பனிப் படகு

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை : சத்தில்லாத குழந்தைகள், முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி.

நீதிக்கதை

 செல்வந்தர்க்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது செல்வந்தர் தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு ஆறு மாதம் கழித்து செல்வந்தர் அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.

இன்றைய செய்திகள்

19.01.2024

*இந்திய அளவில் 25 சதவீதம் இளைஞர்களால் சரளமாக இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க முடிவதில்லை - ஆய்வறிக்கையில் தகவல்.

* ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்படும் 
போக்சோ சட்டம் : அடுத்த கல்வியாண்டில் அமல்.

* பிரதமர் மோடி இன்று சென்னை - நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்கிறார்.

* சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘கழுகு’ என பெயரிடப்பட்ட இயந்திரம்.

*புரோ லீக் கபடி: ஹைதராபாத்தில் இன்று நான்கு அணிகள் மோதல்.

Today's Headlines

*25 percent of India's youth are unable to read even a second-grade subject fluently - reports from research.

 *  POCSO Act will be included in Class 7 Social Science
  : it comes into effect from next academic year.

 * Prime Minister Modi will inaugurate the Kalo India Youth Games 2023 at the Nehru Sports Arena in Chennai today.

 * An engine named 'Eagle' started the tunneling work for Chennai Metro Rail Phase 2 project from  Lighthouse - Boat Club.

 *Pro League Kabaddi: Four teams clash in Hyderabad today.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News