Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 19, 2024

நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

6 மாவட்டங்களுக்கு இதுவரை நாளை பள்ளி வேலைநாள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு : வரையான அனைத்து வகையான பள்ளிகளுக்கும் , வருகை நாட்களை ஈடுசெய்யும் விதமாக நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 17.12.2023 அன்று பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் விதமாக கீழ்க்கண்ட நாட்கள் பள்ளி வேலை அறிவிக்கப்படுகிறது . தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள நாட்களில் பள்ளி முழு வேலை நாளாக செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . நாட்களாக CLOGUILD 06.01.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து , பிரிதொரு நாளில் அதனை ஈடுசெய்திட தலைமையாசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
 
சென்னை மாவட்டம்

2023 டிசம்பர் மாதத்தில் மிக்ஜாங் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக சென்னை மாவட்டத்தின் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

எனவே அவ்விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் கீழ்க்காண் அட்டவணையின் படி பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

 திருப்பத்தூர் மாவட்டம்

நாளை  20-01-2024 சனிக்கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு  வேலை நாள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது அனைத்து பள்ளிகளும் முழு அளவில் எவ்வித விடுமுறையின்றி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் வட்டார கல்வி அலுவலர்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இதனை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்* 

DEO

மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)

திருப்பத்தூர் மாவட்டம்

தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 20.01.2024 அன்று பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றிடவும் அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News