Join THAMIZHKADAL WhatsApp Groups
243 - ஒரு சபிக்கப்பட்ட வரம்!
அண்மையில் ஆசிரியர்கள் மத்தியில் விடாமல் நிகழும் பலதரப்பட்ட களேபரத்திற்கு மூலகாரணம் இரு தரப்பு ஆவார்கள். ஒருவர் அவ்வக்கால ஆட்சியாளர்கள். மற்றொருவர் ஆசிரியர்கள் சார்ந்துள்ள இயக்கவாதிகள். இதில் மூன்றாம் தரப்பு ஒன்று உள்ளது. அதாவது, முழு அரசியல் சாயம் பூசிக்கொண்டு உள்நோக்கத்துடன் உலா வரும் சங்கவாதிகள்.
புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழித்தல், ஊதிய முரண்பாடுகள் களைதல், பழைய ஊக்க ஊதியம் அளித்தல், நிறுத்தி வைத்துள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீள் வழங்குதல், ஆசிரியர் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்தல், கற்பித்தல் பணியில் மட்டும் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்துதல், காலமுறை ஊதியத்துடன் காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்புதல், நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்படாத வகையில் அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் பதவி உயர்வு அளித்தல் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை எளிதில் புறந்தள்ளி வைக்கும் முகமாக ஆட்சியாளர்களால் கேட்பாரின்றிப் போடப்பட்ட பூதாகர வெடிகுண்டுதான் அரசாணை எண் 243!
இது வெளிவந்த அடுத்த நொடியே ஆசிரியச் சமூகத்தினரிடையே நன்றாகப் பற்றிக்கொண்டு எரிய தொடங்கிவிட்டது. அதுவரை பல்வேறு சங்கங்களில் விரும்பியோ, விரும்பாமலோ இருந்து வந்தாலும் ஒருதாய் மக்களாக வாழ்ந்து வரும் பல்வகைப்பட்ட ஆசிரியர்களிடையே பெரிதாக பிளவுகள் பல வெடிக்க ஆரம்பித்து விட்டன
No comments:
Post a Comment