Join THAMIZHKADAL WhatsApp Groups
பார்வை ஒன்றில் காணும் அரசமனையில் அரசுப் பணியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைகள் வழங்குவதற்கான துணைக்குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் அறிக்கைப்பெறப்பட்டுள்ளது. பார்வை இரண்டில் காணும் அரசாணையில், மோடித துணைக்குழுவினால் பெறப்படும் அறிக்கையின் மீது கர்ந்தாய்வு செய்வதற்காக உயர்மட்டக்குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேலே பார்வையில காணும் ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகள் அமைச்சகத்தின் அலுலக் குறிப்பாணையில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டினை 30.06.2016 முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
மேற்சொன்ன சூழ்நிலையில், துணைக்குழுவின் அறிக்கைப் பெறப்பட்டுள்ள நிலையில், உயர்மட்டக்குழு அதன் அறிக்கையின் மீது, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல் அரசுப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% விழுக்காடு இட ஒதுக்கீட்டினை 30.06.2016 முதல் முன்தேதியீட்டு நடைமுறைப்படுத்த உரிய ஆணைகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
மாநில தலைவர்
No comments:
Post a Comment