Join THAMIZHKADAL WhatsApp Groups
நவீன காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு பழக்கங்களும், மோசமான வாழ்க்கை முறைகளும் நம் உடல் நலனில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
இதனால் உடல் உறுப்புகள் சேதமடைந்து உடலில் பல்வேறு நோய்க்கிருமிகள் தாக்குகின்றன. குறிப்பாக இதயம் மற்றும் நரம்பு பகுதிகள் இந்த தவறான உணவு பழக்கத்தினால் மிகவும் சேதமடைகிறது.
இந்த தவறான உணவு பழக்கங்கள் உடலில் பல்வேறு உறுப்புகளில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் நரம்புகளில், மற்றும் இதய தமனிகளில் கொழுப்பாக மாறி அடைத்து கொள்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் பாதுகாக்கலாம். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. தினமும் உணவில் உலர் பழங்கள், விதைகள் மற்றும் நட்ஸ்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து ரத்தத்தை ஓட்டத்தை சீராக்குகிறது.
2. நாம் தினமும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதில் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை உடலில் அதிகரித்து இதயம் மற்றும் நரம்புகளுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது.
3. தினமும் நாம் சாப்பிடும் உணவில் ஒரு பகுதியாக பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தி மாரடைப்பு பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
4. பொதுவாக ஸ்ட்ராபெரி, நெல்லி, ப்ளூ பெரி போன்ற பெர்ரி வகை பழங்களை உட்கொள்வதன் மூலம் இதய நோய் ஏற்படுவதை தடுக்கலாம். 100 கிராம் அளவிற்கு நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய் ஏற்பட்டாலும் விரைவில் குணமடையும்.
No comments:
Post a Comment