இதயநோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், தினசரி உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதயநோய் அபாயத்தை குறைக்கிறது. வழக்கமான உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுவது உண்மையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம் படுத்த உதவும். அந்தவகையில், மாரடைப்பு வராமல் தற்காத்துக் கொள்ள உதவும் எளிய ஐந்து பயிற்சிகள் என்னென்ன என்று பார்ப்போம்.
விறுவிறுப்பான நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி என்பது ஏரோபிக் உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும். மேலும், இது உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். அனைவராலும் எளிதாக செய்யக்கூடிய ஓர் உடற்பயிற்சி இது. உடல் செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுச் செல்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. தினமும் சுமார் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு வராமல் தடுக்கிறது. நடைபயணம், ரன்னிங் போன்ற பிற உடல் செயல்பாடுகளும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதனால், தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள மறக்காதீர்கள்.
சைக்கிள் ஓட்டுதல்
வெளியே கடைத்தெருவுகளுக்குச் செல்லும்போது, முடிந்தளவு பைக்கிற்கு பதிலாக சைக்கிளை பயன்படுத்துங்கள். சைக்கிள் ஓட்டுதல், இதய தசைகளை பலப்படுத்த உதவுகிறது. ஓய்வெடுக்கும் துடிப்பைக் குறைக்கிறது மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், இது அதிக உடல் எடையை குறைத்து, சரியான எடையை பராமரிக்க உதவுகிறது. வேலைக்கு சைக்கிளில் செல்பவர்கள் கார் மற்றும் பைக் பயணி களைக் காட்டிலும் இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவான உடல் பிரச்னையை கொண்டிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. அந்தவகையில், இது இதயத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்கிறது. தினமும் சுமார் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது, உங்கள் இதயத்திற்கு நல்லது.
நீச்சல்
குறைந்த ரத்த அழுத்தம் உட்பட நீச்சலின் முழுமையான பலன்களைப் பெற ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது நன்மை அளிக்கும். ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க வாரத்திற்கு 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது போதுமானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேசமயம், சராசரி மனிதனை விட நீச்சல் வீரர்கள் ஒரே மூச்சில் மிக வேகமாகவும் நீண்ட நேரம் சுவாசிக்கவும் முடிகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீச்சல் ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி என்பதால், இது இதயத்தை பலப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க குறைந்தபட்சம் வாரத்திற்கு 2 மணிநேரமாவது நீச்சல்பயிற்சி செய்வது போதுமானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நடனம்
முடிந்தவர்கள் நடன வகுப்பில் சேரலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த பாடல்களுக்கு வீட்டிலேயே நடனமாடுவதைப் பழக்கிக் கொள்ளலாம். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சகிப்புத்தன்மையை நடனம் அதிகரிக் கிறது என்று தெரிவிக்கின்றது. ஏனெனில் இது ஒரு நபரின் சுவாசம் மற்றும் இதயத்துடிப்பை உயர்த்துகிறது. 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நடனமாடுவது உங்கள் இதயத்திற்கு பெரிதும் பயனளிக்கும்.
ஸ்கிப்பிங்
அதுபோன்று ஸ்கிப்பிங் கயிறு ஆடுவதும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கார்டியோவின் சிறந்த வடிவமாகும். நீங்கள் மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் சேர்ந்து கயிறு குதிப்பதை பயிற்சி செய்யலாம். இதய ஆரோக்கியத்துக்கு ஐம்ப் ரோப் அமர்வுகளில் 20 முதல் 60 நிமிடங்கள் வரை ஈடுபடலாம்.
இந்தப் பயிற்சிகளை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் இதய ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல் வாழ்வையும் மேம்படுத்தலாம். எந்தவொரு புதிய உடற்பயிற்சி முறையையும் தொடங்குவதற்கு முன் ஒரு மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள். எனவே, நீங்கள் இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள் சிறிதுநேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டுங்கள். ஸ்கிப்பிங் கயிறு ஆடுங்கள், நீச்சல் பழகுங்கள் அல்லது யாரும் பார்க்காதது போல் நடனமாடுங்கள். இவையெல்லாம் நீங்கள் செய்யும்போது, உங்கள்
இதயத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
No comments:
Post a Comment