Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 20, 2024

ரயிலில் லோகோ பைலட் ஆக சேர வேண்டுமா... 5,696 காலியிடங்கள் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்திய அளவில் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்றாக கருதப்படும் உதவி எஞ்சின் ஓட்டுநர் (Assistant Loco Pilots - ALPs) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு, கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு இந்திய ரயில்வே வாரியம்பணியாளர் சேர்க்கையை நடத்தியது. 5 ஆண்டுகால காத்திருப்பு காலத்திற்கு பிறகு தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: உதவி எஞ்சின் ஓட்டுநர் (Assistant Loco Pilots - ALPs)

காலியிடங்களின் எண்ணிக்கை: 5696

முக்கியமான நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் நாள் : 20.01.2024

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 19.02.2024

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு 01/07/2024 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். கணவனால் தனித்து விடப்பட்ட பெண்கள், கைப்பெண்கள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

அடிப்படைத் தகுதிகள்: 10ம் வகுப்பு கல்வித் தேர்ச்சியுடன் பொருத்தமான பிரிவில் என்சிவிடி/ டிஸ்சிவிடி சான்றிதழ் (அல்லது) 10ம் வகுப்பு கல்வித் தேர்ச்சியுடன் பொருத்தமான பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ பட்டயம் (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி வாரியம்/பல்கலைக்கழகம் அல்லது அதற்கு ஈடான நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: தேர்வு முறை பல கட்டங்களைக் கொண்டது. கணிணி அடிப்படையிலான தேர்வு மட்டும் இரண்டு கட்டங்களாக (CBT -1 & CBT - 2 ) நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள் மட்டுமே கணினி அடிப்படையிலானகணித தேர்வுக்கு (Computer Based Aptitude Test) அழைக்கப்படுவர். அதன்பிறகு, மருத்துவப் பரிசோதனை (எஞ்சின் ஓட்டுநருக்கான தூரப் பார்வை, வண்ணங்கள் அறியும் பார்வை மற்றும் உஷார் நிலை ஆகியவை மதிப்பிடப்படும்) மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும்.

: தனியார் துறையில் எளிதில் வேலை பெறலாம்... பலருக்கும் தெரியாத அரசின் சூப்பர் திட்டம்

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள் ஆகியோர் ரூ.250 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த பணி நியமனங்களில் பங்கேற்கும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களின் (RRBs Participating in CEN 01/2024) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சென்னை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் rrbchennai ஆகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News