Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று ஒரே நாளில் 6 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:
1) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமனம்.
2) தோட்டக்கலை இயக்குனராக இருந்த பிருந்தா தேவி: சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றம்.
3) உயர்கல்வித்துறை துணை செயலராக இருந்த தற்பகராஜ்: திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக மாற்றம்.
4) மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கிஷோர் : தென்காசி மாவட்ட கலெக்டராக நியமனம்.
5) மின்னணு கார்ப்பரேசன் நிர்வாக இயக்குனராக இருந்த அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக மாற்றம்.
6) வணிகவரித்துறை இணை கமிஷனராக இருந்த சுப்புலெட்சுமி வேலூர் மாவட்ட கலெக்டராக மாற்றம்.
7) திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்த முருகேஷ்: வேளாண் இயக்குனராக நியமனம்.
8) வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல்பாண்டியன்: தோட்டக்கலை இயக்குனராக நியமனம்.
9) தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் : உயர்கல்வித்துறை துணை செயலராக நியமனம்
10) எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக இருந்த லெட்சுமி : மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக நியமனம்.
11) வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக இருந்த பிரகாஷ் வேளாண் வணிக மற்றும் வர்த்தக கமிஷனராக நியமனம்.
12) வேளாண் வணிக மற்றும் வர்த்தக கமிஷனராக இருந்த நடராஜன்: வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமனம்.
No comments:
Post a Comment