Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 5, 2024

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்த 8 காலை உணவுகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நீரிழிவு நோயாளிகள் குறிப்பாக காலையில் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், அதேசமயம் கிளைசெமிக் குறியீடு, கிளைசெமிக் லோட் இரண்டுமே குறைவாக இருக்க வேண்டியதும் முக்கியம்.

அந்தவகையில் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான, அதேசமயம் சர்க்கரையை ஏற்றாத காலை உணவுகள் பற்றி பார்க்கலாம்.

1. ஆம்லெட் 

ஒரு பௌலில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் சேர்த்து ஆம்லெட்டாக செய்து சாப்பிடலாம்.

2. ​பாசிப்பருப்பு தோசை

அரிசியில் கிளைசெமிக் குறியீடு அதிகம். அதனால் காலையில் அரிசியில் செய்த தோசைக்கு பதிலாக பாசிப்பருப்பில் செய்த தோசை சாப்பிடலாம். இதில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

பாசிப்பருப்பை ஒரு கப் அளவு ஊறவைத்து அரைத்து அதில் வெங்காயம், தேங்காய் துருவல், நறுக்கிய காய்கறிகள் சேர்த்து தோசை ஊற்றி சட்னியுடன் சாப்பிடலாம்.

3. ​கோதுமை ரவை

நீரிழிவு நோயாளிகள் சாதாரண வெள்ளை ரவைக்கு பதிலாக, கோதுமை ரவையுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகள் சேர்த்து கிச்சடியாக எடுத்துக் கொள்வது நல்லது.

4. ​வெந்தயக் கீரை ரொட்டி

சர்க்கரை நோயாளிகள், வெறும் சப்பாத்தியாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, வெந்தயக் கீரையுடன் சேர்த்து ரொட்டியாக செய்து எடுத்துக் கொள்வது நல்லது.

வெந்தயக் கீரையில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற ஒன்று.

5. ​பாலக் ரொட்டி

காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளும் ரொட்டியில் பாலக் கீரையைச் சேர்த்து பிசைந்து ரொட்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

பாலக் கீரையை உணவில் சேர்த்துகொள்ளவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சாய்ஸாக இருக்கும்.

6. ​மசாலா ஓட்ஸ்

ஓட்ஸ் நிறைய பேருடைய காலை உணவாக இருக்கிறது. அதில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு.

நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸில் கேரட், பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட நிறைய காய்கறிகள் சேர்த்து மசாலா ஓட்ஸாக செய்து சாப்பிடலாம்.

7. ​இட்லி, தோசை - சாம்பார்

நீரிழிவு நோயாளிகள் இட்லி, தோசை சாப்பிட வேண்டுமென்றால் 2 இட்லி அல்லது 2 தோசை மட்டும் எடுத்துக் கொண்டு, பருப்பு, காய்கறிகள் நிறைந்த சாம்பாரை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

8. ​கொண்டைக்கடலை சாலட்

நீரீழிவு நோயாளிகளுக்கு காலை உணவிற்குப் புரதங்கள் நிறைந்த பயறு வகைகள், சுண்டல் வகைகளை எடுப்பது நல்லது.ஒரு கப் வேகவைத்த கொண்டைக்கடலையோடு பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News