Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 18, 2024

பெண் வேடமிட்டு தேர்வெழுத முயன்ற நபர் கைது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பஞ்சாபில் காதலிக்காக தேர்வெழுத பெண் வேடமணிந்து சென்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபில் உள்ள பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலையில் காலியாக உள்ள சுகாதார பணியாளர்இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது. இதற்கான கோட்காபுராவில் உள்ள டி.ஏ.வி. தனியார் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டது.

இந்த மையத்தில் காலையிலேயே ஏராளமானோர் தேர்வு எழுத குவிந்தனர்.அவர்களில் ஒருவராக பசில்காவைச் சேர்ந்த அங்ரேஸ் சிங் என்ற இளைஞர் பெண்வேடமிட்டு தேர்வு எழுத வந்தார். தன் காதலிக்காக தேர்வு எழுத முயன்ற அவர் வளையல் லிப்ஸ்டிக் பொட்டு சகிதமாக வந்ததுடன் மட்டுமின்றி போலி ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை காண்பித்து பல்கலை அதிகாரிகளை ஏமாற்றினார். இருப்பினும்தேர்வுக்காக பயோ - மெட்ரிக் எனப்படும் கைரேகையை வைக்க முயன்ற போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

இது குறித்து பல்கலை நிர்வாகம் அளித்த புகாரைதொடர்ந்து அங்ரேஸ் சிங்கை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பரம்ஜித் கவுர் என்ற தன் காதலிக்காக அங்ரேஸ் தேர்வு எழுத வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் விண்ணப்பம் பல்கலை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மோசடி கும்பலுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News