Join THAMIZHKADAL WhatsApp Groups
சிலருக்கு நெஞ்சில் அடிக்கடி சளி கோர்த்து கொள்ளும்.
இவை காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு அனத்தம், தலைபாரம் ஆகியவை ஏற்படும்.
இவ்வாறு பல வித தொந்தரவுகளை கொடுக்கும் நெஞ்சு சளி கரைந்து வெளியேற பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்வது நல்லது. இவை நல்ல பலனை கொடுக்கும். எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றும் தூதுவளை சூப் - தயாரிக்கும் முறை:-
தேவையான பொருட்கள்:-
*தூதுவளை
*மிளகு
*பூண்டு
*சீரகம்
*மஞ்சள் தூள்
*உப்பு
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/4 கைப்பிடி அளவு தூதுவளை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது மிளகு, சீரகம், பூண்டு தட்டி போட்டு கொள்ளவும். கொதிக்கும் தருணத்தில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
தூதுவளை சூப் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து 2 முதல் 3 நிமிடங்கள் கழித்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும்.
இவ்வாறு செய்து குடித்தால் சில மணி நேரத்தில் நெஞ்சில் கோர்த்து கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.
No comments:
Post a Comment