தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சூழலில் பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சில ஆலோசனைகள் வழங்கினார். மேலும் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டட கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகளை உறுதி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல்
சேதமடைந்த கட்டடங்கள் இருந்தால் அவற்றில் மாணவர்களை அமர வைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்த வேண்டும். இதுதொடர்பாக போதிய அறிவுறுத்தல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்புகள், தென் தமிழகத்தில் அதி கனமழை பாதிப்புகள் ஆகியவற்றால் பல்வேறு பள்ளிகள் பாதிக்கப்பட்டன. இவற்றை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் மழை பாதிப்புகள்
பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதி செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் 50க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் பாதிப்புகள் பதிவாகின. எஞ்சிய நாட்களில் ஓரிலக்கத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது ஜனவரி மாதம் பிறந்துள்ளது.
மாணவர்கள், பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
அதுவும் பண்டிகைகள், தொடர் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு திரும்ப உள்ளனர். எனவே கொரோனா தொற்று விஷயத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் உடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் பெரிய சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏதேனும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment