Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 17, 2024

பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி பெறுவது கட்டாயம்: யுஜிசி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பிபிஏ, பிசிஏ போன்ற படிப்புகளை பயிற்றுவிக்க கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்துவிதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அந்த சுற்றறிக்கையில் மணிஷ் ஆர்.

ஜோஷி கூறியுள்ளதாவது:

தொழில்நுட்பக் கல்வி மற்றும் அதுதொடர்பான படிப்புகளை ஏஐசிடிஇ வரையறை செய்வதுடன் கண்காணித்தும் வருகிறது. தொழில்நுட்ப கல்வி என்பது பொறியியல், தொழில்நுட்பம், நகர திட்டமிடல், கட்டிடக்கலை, மேலாண்மை, மருந்தகம், பயன்பாட்டு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த படிப்புகளாகும்.


அதன்படி எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகளை ஒழுங்குப்படுத்தி, அதற்கு அங்கீகாரம் வழங்கும் பணிகளை ஏஐசிடிஇ தற்போது மேற்கொண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக வரும் கல்வியாண்டு (2024-25) முதல் பிபிஏ, பிஎம்எஸ் மற்றும் பிசிஏ போன்ற படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களையும் முறைப்படுத்துவதற்கு ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.

ஒரே மாதிரியான கல்வித் தரத்தை முதுநிலை, இளநிலை படிப்புகளில் பராமரிக்கும் நோக்கத்தில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்ததகவலை மாநிலபல்கலைக்கழகங்கள் தங்களின்கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு யுசிஜி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எனவே, இனி பிபிஏ, பிசிஏ போன்ற படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் அந்தப் படிப்புகளை பயிற்றுவிக்க ஏஐசிடிஇ-யிடம் கட்டாயம் அனுமதியைப் பெற்ற பின்னரே செயல்படுத்த முடியும்.ஏஐசிடிஇ-யின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கையால் போலி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தலைதூக்குவது குறையும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே பிபிஏ, பிசிஏ படிப்புக்கான அனுமதி கோரி கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கல்வி நிறுவனங்கள்https://www.aicte-india.org/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHஎனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News