Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 5, 2024

ஆதார் கார்டில் செல்போன் எண் மாற்ற வேண்டுமா? தபால்காரரே வீடு தேடி வருவார் - எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்படுவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று செல்போன் எண்.

செல்போன் எண் மாற்றம் செய்ய வேண்டுமானால், ஆதார் மையத்திற்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். வயதானவர்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு அது மிகவும் சிரமமானதாக இருக்கும்.

இந்திய அஞ்சல்துறை சேவை

இந்த சிரமத்தை தவிர்க்க, இந்திய தபால் துறை ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆதார் கார்டில் உள்ள செல்போன் எண்ணை மாற்ற வேண்டுமானால், https://ippbonline.com/web/ippb/ippb-customers என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அந்த இணையதளத்தில், "Door step banking service request form" என்பதை ஓபன் செய்து, "Aadhar Mobile Update" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். அதில், "Any specific request" என்ற இடத்தில், "Aadhar Mobile Update" என்ற இடத்தில் புதிய செல்போன் எண்ணை கொடுத்து, "Submit" பட்டனை அழுத்த வேண்டும்.

அதிகாரி வீடு தேடி வருவார்

உங்கள் பதிவு வெற்றிகரமாக இருந்தால், "Your Submission has been Successful" என்ற செய்தி வரும். உங்கள் தகவல்கள் அனைத்தும் தபால் அலுவலகத்திற்கு சென்று சேரும். அங்கிருந்து தபால்காரர் வீட்டுக்கே வந்து கைரேகையை வாங்கிக் கொண்டு, உங்கள் ஆதாரில் உள்ள செல்போன் எண்ணை மாற்றி தருவார். இந்த சேவையானது, ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற வேண்டியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, வயதானவர்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும்.

இப்படியான தகவல் தெரியாதவர்கள் இனி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஆன்லைன் மூலம் தபால்காரரை வீட்டுக்கு அனுப்பி ஆதாரில் செல்போன் அப்டேட் செய்து கொடுக்கும் இந்திய அஞ்சல் துறையின் இந்த திட்டம் குறித்த தகவல் பலருக்கும் இதுவரை தெரிந்திருக்கவில்லை. இனி உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News