Join THAMIZHKADAL WhatsApp Groups
அரிசியை ஒன்றிரண்டு முறை லேசாக அலசினால் போதும். அரிசியை கழுவுகிறேன் என்று நிறைய முறை தண்ணீரை ஊற்றி கழுவினால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிப் போகும்.இப்படி அரிசி கழுவும் தண்ணீர் மற்றும் சாதம் வடித்த தண்ணீரை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்?
முதல் முறை தண்ணீர் ஊற்றி அரிசியை கழுவும் பொழுது மட்டும் அந்த தண்ணீரை கீழே கொட்டி விடலாம். இரண்டாம் முறை நீங்கள் கழுவும் தண்ணீரில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும், அதனை வீட்டில் இருக்கும் செடி, கொடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் செழித்து வளரும். அதற்கு மேல் அரிசியை கழுவ வேண்டிய அவசியமில்லை. நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டியது தான். சாதம் வடித்த கஞ்சியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அதில் லேசாக உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் முற்றிலும் தீரும். நாள் முழுவதும் புத்துணர்சி கிடைக்கும். உடலில் இருக்கும் உஷ்ணம் தணிந்து உடலை குளிர்ச்சி அடைய செய்யும் இதனால் உடல் சூட்டால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீரும். உடலில் நீரின் அளவு குறையும் பொழுது நீர்கடுப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அடிவயிற்றில் அதீத வலியும், சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படும். இப்படியான பிரச்சனைகளும், வெள்ளை படுதல் பிரச்சனை, கண் எரிச்சலும் தீர தினமும் இந்த கஞ்சியை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.
பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது.
இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலும்பு பலம் பெறும்.
ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி. இதனுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரணச் சக்தி பெருகும்.
சாதம் வடித்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.வடித்த கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகளவில் அடங்கி உள்ளன. இதனைப் பயன்படுத்தி ரசம் வைத்தும் சாப்பிடலாம்.
இட்லிமாவு அரைக்கும்போது இதனைக் கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
சாதம் வடித்த கஞ்சியுடன் திராட்சைப் பழங்களைச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர, முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.கால் வலியில் அவதிப் படுபவர்கள்.
சாதம் வடித்த கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைத்தால் கால் வலி, வீக்கம் குறையும். இது நல்ல வலி நிவாரணியாக பயன்படும்.
சாதம் வடித்த கஞ்சி பசியைத் தூண்டும் தன்மையுடையது. இதனுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் சாப்பிட்ட உணவுகள் சீக்கிரம் ஜீரணம் ஆகும்.முகம், கழுத்து, கைப் பகுதிகளில் சாதம் வடித்த கஞ்சியைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அலசி லர, விரைவில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதை காணலாம்.
வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வடித்த கஞ்சியில் வெந்தயத் தூளையும் பனங்கற்கண்டையும் சேர்த்து குடிக்க சரியாகும்.ஒரு காட்டன் துணியில் வடித்த கஞ்சியை நனைத்து சிரங்கு உள்ள இடங்களில் வைத்து கட்டிவந்தால் வரைவில் குணமாகும்.
நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் பெரும்பாலும் சிகைக்காய் பயன்படுத்துவது தான் வழக்கம். சிகைக்காய் உடன் தண்ணீர் சேர்க்காமல் வடித்த கஞ்சி தண்ணீரை சேர்ப்பது உண்டு. இந்த கஞ்சி தண்ணீருடன் சிகைக்காய் கலந்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினை, நரை முடி பிரச்சனை, வறட்சி, அடர்த்தி குறைவு ஆகிய அனைத்து பிரச்சனைகளும் தீரும். இப்போது பெரும்பாலானோருக்கு உணவு முறை மாற்றத்தின் காரணமாக தலை முடியின் அடர்த்தி குறைகிறது. இவர்கள் இந்த முறையில் தலைக்கு அலசினால் ஒரே மாதத்தில் இழந்த முடி மீண்டு அடர்த்தியாக நெருக்க நெருக்கமாக வளர்ந்து பட்டு போல கேசம் மின்னும்.
வயதானவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மூட்டு வலி. இந்த மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்க சூடாக இருக்கும் வடித்த கஞ்சியை மூட்டுப்பகுதியில் ஊற்றி 10 நிமிடம் மசாஜ் செய்தால் போதும், வலி எல்லாம் காணாமல் போகும். தொடர்ந்து 10 நாட்கள் இப்படி செய்ய மூட்டு வலி நீங்கும். கால்களுக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் குதிகால் வலியால் அவதிப்படுவார்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு குதிகால் வலி நிச்சயம் இருக்கும். குதிகால் வலி தீர 15 நிமிடம் சூடாக இருக்கும் கஞ்சி தண்ணீரில் கால்களை வைத்து எடுத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முகத்திற்கு வடித்த கஞ்சியை தடவி 20 நிமிடம் உலர விட்டு கழுவினால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் அனைத்தும் மறையும், முகச்சுருக்கம் நீங்கி முகம் இளமையான தோற்றம் தரும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். நீங்கள் துணி துவைத்து முடித்த பிறகு கடைசியாக தண்ணீரில் இந்த கஞ்சியை சேர்த்து அலசினால் துணிகள் நிறம் மாறாமல் பளிச்சென்று நீண்ட நாட்களுக்கு உழைக்கும். வடித்த கஞ்சியுடன், வெண்ணெய் சேர்த்து குடித்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பார்கள்.
மேலும் நீங்கள் வீட்டை துடைக்க பயன்படுத்தும் துணிகள், சமையலறையில் பயன்படுத்தும் கரித்துணி அவற்றில் இருக்கும் விடாப்பிடியான கரைகள் நீக்க சிறிது நேரம் சூடான கஞ்சி தண்ணீரில் அவற்றை ஊற வைத்து துவைத்தால் நல்ல பலன் கிடைக்கும். பால் பாத்திரம், முட்டை வேக வைத்த பாத்திரம், எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்கள் போன்றவற்றை எளிதாக சுத்தம் செய்ய மற்றும் துர்நாற்றம் வீசாமல் இருக்க கொஞ்சம் கஞ்சி தண்ணீரை அதில் ஊற வைத்து பின்னர் தேய்த்து கழுவினால் நல்ல பலன் தெரியும். இப்படி கஞ்சி தண்ணீர் பல வகைகளில் நமக்கு பயன்படும் பொழுது நாம் வீணாக ஏன் கொட்ட வேண்டும்? என்பதை சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment