Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உபரி ஆசிரியர் பணியிடங்கள்
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநகரத்தின் கீழ் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆண்டுதோறும் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-24 கல்வியாண்டில் கடந்த 1.8.2023ஆம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஆசிரியர் இல்லாமல் உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியிடங்கள் வரும் காலத்தில் காலிப்பணியிடமாக கருதப்படமாட்டாது.
No comments:
Post a Comment