Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆகியவற்றுக்கு, டில்லி மாநகராட்சி கல்வித்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகராட்சி கல்வித்துறை ரோகிணி மண்டல துணை இயக்குனர் ரிஷிபால் ராணா பிறப்பித்துள்ள உத்தரவு:மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், அங்கீகரிக்கப்படாத சங்கங்களில் இருந்து கல்வித்துறை ஊழியர்கள் விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment