Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 2, 2024

நிப்ட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு: நாளையுடன் நிறைவு

நிப்ட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிப்ட் எனும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனங்கள் (NIFT-National Institute of Fashion Technology) மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஆடை மற்றும் அணிகலன் வடிவமைப்பு, மேலாண்மை, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இவற்றில் சேர தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பாண்டுக்கான நிப்ட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவானது கடந்த டிசம்பர் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (ஜனவரி 3) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் nift.ac.in எனும் வலைத்தளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை தவறவிடும் மாணவர்கள் கூடுதலாக ரூ.5,000 தாமதக் கட்டணம் செலுத்தி ஜனவரி 4 முதல் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த நிப்ட் தேர்வானது நாடு முழுவதும் 60 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் ஜனவரி 3வது வாரத்தில் வெளியாக உள்ளது. விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால் nift@nta.ac.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், கூடுதல் விவரங்களை https://www.nta.ac.in/ எனும் இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News