Join THAMIZHKADAL WhatsApp Groups
தேசிய பென்ஷன் திட்டத்தின் உறுப்பினர்கள் முன்கூட்டியே பகுதி அளவு தொகையை விலக்கி கொள்வதற்காக புதிய விதிமுறைகள் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையதால் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய பென்ஷன் திட்டத்தில் இருந்து உறுப்பினர்கள், நிபந்தனைகளின் அடிப்படையில் பகுதி விலக்கலை மேற்கொள்ளலாம்.
பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, உறுப்பினர்கள் தங்களது பங்களிப்பில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே முன்னதாக விலக்கி கொள்ள முடியும்.
பிள்ளைகள் உயர்கல்வி, திருமண செலவு, வீடு வாங்க, மருத்துவ தேவைகள், திறன் வளர்ச்சி, சுயதொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பகுதி விலக்கல் சாத்தியம்.
மேலும், இதற்கு தகுதி பெற உறுப்பினர் மூன்று ஆண்டுகளுக்கு மேல் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். உறுப்பினர்கள் திட்டத்தில் காலத்தில் மூன்று முறை மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
ஒரு முறை பணத்தை விலக்கி கொண்ட பிறகு, அதன் பிறகு செலுத்தும் பங்களிப்பில் இருந்து மட்டுமே இன்னொரு முறை விலக்கி கொள்ள முடியும்.
பணத்தை விலக்கி கொள்ள சுய தேவை சான்றிதழோடு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment