Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக பள்ளி கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளுக்கான பணியிடங்களில் முக்கிய மாற்றங்களை உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
பள்ளிக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களில் சிலரை மட்டும் மாற்றி பள்ளி கல்வித்துறை புதிய அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக, பள்ளிக்கல்வித்துறைக்காக செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை கண்காணிக்கும் பணியிடங்களுக்கு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான அரசாணை கடந்த ஜூலை ஆறாம் தேதி அன்று வெளியிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து அரசு அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மாற்றி பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை மாவட்ட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பி ஸ்ரீ வெங்கடப்பிரியா, செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளிகள் மாநிலத் திட்ட இயக்குனர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் டி.உமா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதேபோல் 38 மாவட்டங்களுக்குமான அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment