Join THAMIZHKADAL WhatsApp Groups
குடியரசு தின விழா நாளில் நடக்கும் கிராம சபா கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களில் கிராமசபா கூட்டம் நடக்கிறது.
இதில், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்று, தங்களது தேவை மற்றம் கோரிக்கை குறித்து நேரடியாக தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில், தங்கள் பகுதியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில், அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணி உள்ளிட்ட செயல்பாடுகளை பள்ளிக்கு அருகில் வசிக்கும் மக்களும், பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர் அல்லது கல்வி அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, இது குறித்து பேச வேண்டும். அதற்காகவே, கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அரசு அறிவுறுத்தியுள்ளது என்றனர்.
No comments:
Post a Comment