Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 22, 2024

இனி ஆதார் அட்டையை இந்த விஷயத்திற்கு பயன்படுத்த முடியாது!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

 பிறந்த தேதிக்கான ஒப்புதல் டாக்குமெண்ட்களுக்கான பட்டியல்களில் இருந்து ஆதார் அட்டையை நீக்கி இருப்பதாக எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்டு நிறுவனம் (Employees' Provident Fund Organisation - EPFO) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் ஒரு அக்கவுண்ட் ஹோல்டர் தன்னுடைய பிறந்த தேதியை அப்டேட் செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ நினைத்தால் அதற்கு ஆதார் அட்டையை இனிவரும் நாட்களில் ஒப்புதல் ஆவணமாக பயன்படுத்த முடியாது. இது குறித்து நிறுவனம் ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"இதன் தொடர்பாக, UIDAI (நகல் இணைக்கப்பட்டுள்ளது) -இல் இருந்து ஒரு கடிதம் பெறப்பட்டுள்ளது. அதில் பிறந்த தேதிக்கான ஒப்புதல் ஆதாரமாக இருக்கக்கூடிய ஆதாரை ஏற்கப்படக்கூடிய டாக்குமெண்ட்களின் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது," இவ்வாறு ஜனவரி 16 ஆம் தேதி அன்று வெளியான EPFO சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதன்படி, பிறந்த தேதிக்கான ஒப்புதல் ஆவணம் பட்டியலில் இருந்து இணைப்பு 1 -இல் அட்டவணை - ஆ -இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் அட்டை நீக்கப்பட்டுள்ளது. " என்று சுற்றறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

EPF அக்கவுண்டில் பிறந்த தேதியை மாற்றுவதற்கு என்னென்ன டாக்குமெண்ட்கள் தேவைப்படும்?

EPFO -இன்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள டாக்குமெண்ட்களை ஆதார் அட்டைக்கு பதிலாக பிறந்த தேதி ஒப்புதல் டாக்குமெண்டாக பயன்படுத்தலாம்:

- பிறந்த சான்றிதழ்

- அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகம் வழங்கிய ஏதேனும் ஒரு மதிப்பெண் சான்றிதழ்

- பள்ளி விடுகை சான்றிதழ்

- பள்ளி மாற்றம் சான்றிதழ்

- சிவில் சர்ஜன் வழங்கிய மருத்துவ சான்றிதழ்

- பாஸ்போர்ட்

- PAN நம்பர்

- அரசு பென்ஷன்

- மெடிகிளைம் சான்றிதழ்

- குடியிருப்பு சான்றிதழும் திருத்தம் செய்வதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு ஆவணம் ஆகும்.

குறிப்பு: இந்த அனைத்து டாக்குமெண்ட்களிலும் பெயர் மற்றும் பிறந்த தேதி கட்டாயமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆதார் அட்டை என்றால் என்ன, அதனை எங்கே பெற்றுக்கொள்ள வேண்டும்?

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் இந்திய அரசாங்கத்தின் சார்பாக யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Unique Identification Authority of India - UIDAI) வழங்கக்கூடிய 12 இலக்க தனித்துவமான எண். ஆதார் எண்ணானது வங்கி கணக்கு திறக்க, பல்வேறு அரசு திட்டங்களில் பலன் பெற, சிம் கார்டு வாங்குவதற்கு என்று வெவ்வேறு காரணங்களுக்கு இந்திய மக்களுக்கு பயன்படும் ஒரு முக்கிய ஆவணம். ஆதார் அட்டையில் ஒரு நபரின் பெயர், முகவரி மற்றும் பயோமெட்ரிக் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும். ஆதார் அட்டையை அடையாள சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழாக பயன்படுத்தலாம் என்பதை UIDAI தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் பிறப்பு சான்றிதழாக அது செல்லுபடி ஆகாது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News