Join THAMIZHKADAL WhatsApp Groups
கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. • மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வரலாம்.
மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
• உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.
• நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.நீரிழிவு நோயாளிகள் தினமும் ஆலோவேரா ஜூஸ் எடுக்கும் போது கவனம் தேவை. ஏனெனில் இவை உடலில் இரத்த சர்க்கரை அளவை திடீரென்று குறைத்து விடலாம். அதனால் எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கவனித்துகொண்டே இருக்க வேண்டும்.
• உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும்.
• காலையில் வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடிப்பதன் நன்மைகளில் ஒன்று எடை இழப்பை ஊக்குவிப்பது. கற்றாழை சாற்றில் பாலிஃபினால்கள் எனப்படும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது உடலில் நச்சுக்களை வெளியேற்றி, உடல் உள்புறத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் நச்சுக்கள் தேங்காமல் வெளியெறினாலே செரிமான மண்டலம் சீராக இயங்கி உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. இதனால் உடல் எடை விரைவாக குறைய உதவுகிறது.
• தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும்.
• இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment