Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 12, 2024

கனரா வங்கியில் மேலாளர் வேலைவாய்ப்பு..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், காலியாக உள்ள துணை மேலாளர், உதவி மேலாளர், ஜூனியர் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்குத் தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இணையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

துணை மேலாளர் - 02 பணியிடங்கள்

உதவி மேலாளர் - 12 பணியிடங்கள்

ஜூனியர் அதிகாரி - 12 பணியிடங்கள்

கல்வி தகுதி:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, BE, B.Tech, MCA, MBA, CFA, PGPSM ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

31.01.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

துணை மேலாளர் - 22 வயது முதல் 30 வயது வரை

உதவி மேலாளர் - 22 வயது முதல் 30 வயது வரை

ஜூனியர் அதிகாரி - 20 வயது முதல் 28 வயது வரை

ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.21,200/- முதல் ரூ.44,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து 22.01.2024 அன்றுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு:


விண்ணப்பிக்க:

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News