Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 31, 2024

TNPSC குரூப் 4 அறிவிப்பு வெளியீடு - 6244 காலி பணியிடங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

பணியின் விவரங்கள் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (குரூப் 4) பணியிடங்களுக்கு இன்று (30.01.2024) முதல் 28.02. 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர் தனிச் செயலர், இளநிலை செயல் பணியாளர், வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர், பால் அளவையாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் என மொத்தம் 6,244 பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

சம்பள விவரம் : குறைந்தபட்சம் ரூ. 16,600 முதல் அதிகபடியாக ரூ.75,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு SC, SC(A),ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் MBC/ DC,BC (OBCM) மற்றும் BCM பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 42 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர், வரித்தண்டலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு SC(A),ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு 37 ஆகவும், MBC/ DC,BC (OBCM) மற்றும் BCM பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு 34 ஆகவும் நிரணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு நிரப்பப்படும் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பணியிடங்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கான நிரப்பப்படும் தனிச் செயலர் பணியிடங்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சிறு தொழில் கழகத்திற்கு நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்காக நிரப்பப்படும் இளநிலை செயல் பணியாளர், பால் அளவையாளர் நிலை- 3 மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்கள், தமிழ்நாடு வாக்ஃபு வாரியத்திற்காக நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் வரும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மூலிகைப் பன்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகத்திற்காக நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிகளுக்கு கீழ் வரும் வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் மற்றும் வனக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு SC(A),ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு 37 ஆகவும், 

MBC/ DC,BC (OBCM) மற்றும் BCM பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு 37 ஆகவும் நிரணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி : இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் பொதுக் கல்வித் தகுதி முதல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு சான்றிதழ் படிப்புகள் கட்டாயம்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையத்தளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிகழ்வுகள் தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2024

ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய 04.03.2024 முதல் 06.03.2024

தேர்வு தேதி 09.06.2024




No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News