Join THAMIZHKADAL WhatsApp Groups
உலக சதுப்பு நில நாள் |
இரண்டொழுக்க பண்புகள் :1
பொன்மொழி :
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
பொது அறிவு :
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
அகத்தி கீரை :உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
பிப்ரவரி 02
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
நீதிக்கதை
பாடம் படித்த ஓநாய்
காட்டு வழியே வந்து கொண்டு இருந்த வரிக்குதிரை ஒன்று பாதை மாறி விட்டது. இருப்பினும் தைரியசாலியான அது பயப்படாமல் நடந்து கொண்டு இருந்தது.
எப்படியும் நம் இடத்தை விரைவில் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் அது கைவிடவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் நம் இடத்தை அடைந்து விடலாம் என எண்ணியது.
தொடர்ந்து நடந்து வந்த களைப்பால், வரிக்குதிரைக்கு பசி எடுத்தது, ஓர் இடத்தில் நன்கு பசுமையான புல்வெளியும், தண்ணீர் நிறைந்த குட்டையும் இருக்கக் கண்டு மிகவும் மகிழ்ந்தது.
இந்த இடத்தில் சிறிது நேரம் புல்லை மேய்ந்து விட்டு, தண்ணீரும் குடித்து விட்டு பின்னர் நடக்கலாம் என முடிவு செய்து அந்த இடத்தை அடைந்தது. வேண்டிய அளவு புல்லை ருசித்து மேய்ந்து கொண்டு இருந்தது.
அப்பொழுது அந்தப் பக்கம் வந்த ஓநாய் ஒன்று வரிக் குதிரையைப் பார்த்து, "இன்று நமக்கு நல்ல விருந்து தான் கிடைத்துள்ளது. அது மெதுவாக மேய்ந்து கொண்டே இருக்கட்டும். நம் நண்பனையும் துணைக்கு அழைத்து வந்து விடுவோம்" என எண்ணி மகிழ்ச்சியுடன் ஓசைப்படாமல் நடந்தது . ஓநாய்.
சிறிது தூரத்தில் அதன் நண்பன், நரி தூங்கிக் கொண்டு இருந்தது. நரியை அழைத்தது ஓநாய். நரி தூக்கக் கலக்கத்தில் எழுந்தது. "ஏன் இப்படி நல்ல தூக்கத்தைக் கெடுக்கிறாய்" என்றபடி கொட்டாவி விட்டது.
"நண்பனே, இதுவல்ல தூங்கும் நேரம். நமக்கு இன்று சரியான வேட்டை காத்துக் கொண்டு இருக்கிறது. தாமதிக்காமல் உடனே புறப்படு."
"விபரமாகக் கூறு"
"முதலில் எழுந்து நட, செல்லும் பொழுதே விபரம் கூறுகிறேன். அந்த மிருகம் வேறு எங்காவது சென்றுவிடப் போகிறது. கேள்வி கேட்டுக் கொண்டு இருக்காமல் கிளம்பு",
ஓநாயும், நரியும் கிளம்பின. சிறிது நேரத்தில் வரிக் குதிரை மேய்ந்து கொண்டு இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன.
ஓநாய், "அதோ பார்த்தாயா உடம்பில் கோடு,, கோடாக இருக்கிறதே, அந்த மிருகத்தைப் பற்றி தான்' கூறினேன்."
"நானும் இதுவரை இதுபோன்ற மிருகத்தைப் பார்த்தது இல்லை. பார்ப்பதற்கு கழுதை போன்றும், குதிரை போன்றும் இருக்கிறதே."
"வா! அதன் அருகில் சென்று விசாரிப்போம்!" முதலில் இரண்டும் வரிக் குதிரையின் அருகில் சென்றன. வரிக்குதிரையோ அவைகளைக் கவனிக்காமல் புல்லை மேய்ந்து கொண்டு இருந்தது.
ஓநாய்,"ஏய்,வித்தியாசமான மிருகமே நீ யார்? எங்கு இருந்து வருகிறாய் ? இதுவரை நாங்கள் உன்னைக் கண்டது இல்லையே" என விசாரித்தது..
ஓநாயையும், நரியையும் பார்த்த வரிக்குதிரை மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டது. அவை தீய விலங்குகள் என தெரிந்ததும், பயப்படாமல் இருந்தது.
நான் வானுலகில் இருந்து தேவர்களால் இங்கு அனுப்பப்பட்டேன்."
ஓநாயும், நரியும் ஆச்சரியமடைந்தன.
என்ன, வானுலகில் இருந்து வருகின்றாயா! ஆச்சரியமாய் இருக்கிறதே !
"ஆமாம், உண்மையைத்தான் சொல்கிறேன்"
"ஆனால் நரி இதை நம்பவில்லை," இதை எங்களை நம்பச் சொல்கின்றாயா?
வரிக்குதிரையோ, "நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்."
"நீ சொல்வதை உண்மை என நிரூபிக்க முடியுமா?"
நரி கேட்கவும், வரிக்குதிரை, "நிச்சயம் என்னால் நிரூபிக்க முடியும் என் பின்னங்கால் குழம்பில் எழுதப் பட்டுள்ளது. படித்துப் பாருங்கள்" என்றது.
இதில் ஏதோ சூழ்ச்சி செய்யப் பார்க்கிறது வரிக் குதிரை, என நினைத்த நரி "எனக்குப் படிக்கத் தெரியாது, எனவே, ஓநாய் அண்ணனே படிக்கட்டும்" என்றது.
ஓநாயோ தனக்கும் படிக்கத் தெரியாது என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை, "சரி காலைத் தூக்கிக் காட்டு, நான் படித்துப் பார்க்கிறேன்" என்றவாறு, வரிக்குதிரையின் பின்னால் சென்று அமர்ந்தது.
வரிக்குதிரை தன் பின்னங்காலைத் தூக்கிக் காட்டியது. அதன் காலைப் பிடித்து என்ன எழுதி இருக்கிறது. எனத் தன் முகத்துக்கு அருகில் வைத்து ஓநாய் பார்த்தது.
"என்ன இது உன் காலில் ஒன்றும் சரியாக எழுத வில்லையே"
"இன்னும் நன்றாகப் பார் தெரியும் எனக் கூறியவாறு தன் பலம் கொண்ட மட்டும் ஒரு உதை விட்டது வரிக்குதிரை."
வரிக்குதிரை விட்ட உதையால் ஓநாயின் வாயில் இருந்து இரத்தம் கொட்டியது. பற்கள் ஆட்டம் கண்டன. வலி பொறுக்க முடியாமல் ஓநாய் கத்தியபடியே காட்டுக்குள் ஓடியது. அதன் பின்னால் தப்பித்தோம் என எண்ணி நரியும் ஓடியது.
துன்பத்தில் இருந்து விலகி வரிக்குதிரை நிம்மதியாய் நடக்க ஆரம்பித்தது.
நீதி: கால சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கருத்துடன் செயல்பட்டால் வந்த ஆபத்திலிருந்து தப்பித்து விடலாம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment