1)வாதநாராயணன்
இந்த இலையை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கை கால் வலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் முழுவதுமாக குணமாகும்.
2)ஆடாதோடை
ஆடாதொடை இலையை அரைத்து பொடியாக்கி கசாயம் செய்து குடித்து வந்தால் சளி, இருமல், சுவாசக் கோளாறு சரியாகும்.
3)சித்தரத்தை
இதை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு அகலும்.
4)இலவங்கம் +பட்டை
இந்த இரண்டு பொருளையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிளாஸ் சூடான பாலில் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
5)வேப்பங்கொழுந்து
இதை வெயிலில் காயவைத்து உலர்த்தி பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறி விடும்.
6)செம்பருத்தி
இருதயம் தொடர்பான பாதிப்பு நீங்க செம்பருத்தி பூவை உலர்த்தி பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வரவும்.
7)முருங்கை விதை
ஆண்மை தொடர்பான பாதிப்பு நீங்க முருங்கை விதையை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வரவும்.
8)சுக்கு
இதை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர அஜீரணக் கோளாறு, சளி, வறட்டு இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.
No comments:
Post a Comment