உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் கண் பார்வை மிகவும் முக்கியம்.
கண் பார்வை தெளிவாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் கண் தொடர்பான பாதிப்பால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரி செய்ய தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு கண் பார்வையை தெளிவாக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)பிஸ்தா பருப்பு
2)பாதாம் பருப்பு
3)கற்கண்டு
4)பெருஞ்சீரகம்
5)கசகசா
6)பால்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் நான்கு பிஸ்தா பருப்பு மற்றும் 5 பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
ஒரு இரவு ஊறி வந்த பின்னர் அதன் தோலை நீக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம் மற்றும் பிஸ்தாவை போட்டு சிறிது பால் ஊற்றி அரைக்கவும்.
அடுத்து அதில் கசகசா மற்றும் பெருஞ்சீரகம் போட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸி ஜாரில் சிறிது கற்கண்டு போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.
அடுத்து அதில் அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு அதில் சுவைக்காக கற்கண்டு பொடி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த பாலை கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
No comments:
Post a Comment