Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 15, 2024

இனி 12ம் வகுப்பு வரை.. அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தகுதி தேர்வு கட்டாயம்- மத்திய அரசு திட்டம்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப் பின்பற்ற வேண்டிய புதிய விதிகளை என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் முன்மொழிந்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி மேல்நிலை கல்வி, அதாவது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

நேற்று டெட் தேர்வு தொடர்பாக நடத்தப்பட்ட தேசிய மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது டெட் எனப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது பள்ளிகளில் ஆசிரியராக விரும்புவோருக்கு முக்கியமான தேர்வாகும். இப்போது இது தொடர்பாகவே முக்கிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் ஆலோசனை: என்சிடிஇ கவுன்சில், சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைந்து, தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஆலோசிக்க ஒரு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் கலந்து கொண்ட நிலையில், இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கலந்து கொண்ட என்சிடிஇ உறுப்பினர் செயலாளர் கேசங் ஒய். ஷெர்பா" தேசிய கல்விக் கொள்கையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது. மேல்நிலை கல்வியை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

ஏன் முக்கியம்: சிபிஎஸ்இ தலைவர் நித்தி சிப்பர் இது தொடர்பாகக் கூறுகையில், "மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதில் ஆசிரியரின் திறன் ரொம்பவே முக்கியத்தனதாக இருக்கிறது. அவை வகுப்பறையில் மாணவர்களின் கற்றால் திறனை ஊக்குவிக்கும் ஒரு சூழலை உருவாக்குகிறது, எனவே ஆசிரியரின் திறனைப் புரிந்துகொள்வதில் இந்த டெட் தேர்வு ரொம்பவே முக்கியமானதாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

என்சிடிஇ தலைவர் பேராசிரியர் யோகேஷ் சிங் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்துக் கூறுகையில், "நாம் மார்க்களில் கவனம் செலுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக மாணவர்களை ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், புதிய கல்விக் கொள்கை 2020ல் கூறப்பட்டு உள்ளது போல மாணவர்களுக்கு நம் நாட்டின் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளைச் சொல்லித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

அடுத்த திட்டம் என்ன:

நமது பள்ளிகளில் சரியான ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துகிறார்கள் என்பதை உறுதி செய்ய இந்த தேர்வு கட்டாயம் என்றே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வல்லுநர்கள் கூறினர்.

தற்போதைய நிலவரப்படி, 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வரும் காலத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வைக் கட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News