Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 13, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2024

உலக வானொலி நாள்

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

விளக்கம்:

 எந்த பொருள் எந்த தன்மையுடையாதாக இருப்பினும் அந்த பொருளின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்வதே அறிவு.

பழமொழி :

Necessity is the mother of invention

தேவையே கண்டுபிடிப்பின் தாய்

இரண்டொழுக்க பண்புகள் :

. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி :

இந்த உலகை வெல்வதற்கு நாம் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்த வேண்டாம். அன்பையும் இரக்கத்தையும் பயன்படுத்துவோம். --அன்னை தெரசா

பொது அறிவு : 

1. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

2. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு

English words & meanings :

 waggish - witty or joking சிரிப்பூட்டுகின்ற; waif - homeless children , orphaned ஆதரவற்ற குழந்தை

ஆரோக்ய வாழ்வு : 

பசலை கீரை: கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும் போக்கக் கூடிய தன்மை இந்த பசலைக் கீரைக்கு உள்ளது.


பிப்ரவரி 13

உலக வானொலி நாள்


உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879ஹைதராபாத் - மார்ச் 2,1949லக்னோ) அவர் பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

 கடிதம் சொல்லும் கதை


ஒரு கிராமத்தில் வசித்துவந்த பண்ணையாரின் நிலத்தில் ஏராளமாக கரும்பு விளைந்தது. கரும்பை, ஒருவருக்கு விற்றதுபோக இருபத்து ஐந்து கரும்புக் கழிகள் மீதி இருந்தன. அடுத்த கிராமத்தில் வசித்து வரும் நண்பருக்கு அவற்றைக் கொடுக்க எண்ணினார். அடுத்த கிராமத்துக்குச் செல்ல சாலை வசதிகள் இல்லை. எனவே ஒரு வேலையாளிடம் கொடுத்து அனுப்ப நினைத்தார். வேலு என்பவன் அவ்வூரில் வசித்து வந்தான். அவன் படிப்பறிவு இல்லாதவன். ஆனால் நல்ல உழைப்பாளி.

பண்ணையார் வேலுவை அழைத்தார். "வேலு! கரும்புக் கழிகளைக் கட்டி வைத்துள்ளேன். அவற்றை அடுத்த கிராமத்திலுள்ள சுப்பையாவிடம்

சேர்த்து விட்டு வர வேண்டும். போய் விட்டு வந்ததும் உனக்குக் கூலி தருகிறேன்" என்றார்.

"சரி, ஐயா, இதில் எவ்வளவு கரும்புக் கழிகள் இருக்கின்றன?" என்றான் வேலு.

"அதெல்லாம் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளேன். இதையும் சுப்பையாவிடம் கொடு. கடிதம் விவரம் சொல்லும்" என்றார்.

பண்ணையார் தந்த கரும்புக் கழிச் சுமையை

தலையில் ஏற்றிக் கொண்டு வேலு அடுத்த கிராமத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றான். சுட்டெரிக்கும் வெயில் காலம். வேலுவுக்கு தாகம் எடுத்தது. கரும்பு ஒன்றைக் கடித்துத் தின்று தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என எண்ணினான். சுமையைக் கீழே இறக்கி வைத்தான். கரும்பை எடுத்துத் தின்பதற்கு முன்னால் ஒரு யோசனை தோன்றியது.

ஒரு கரும்பை எடுத்துத் தின்று விட்டால், எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும். அதை இந்தக்கடிதம் மூலமாக அறிந்து கொண்டு சுப்பையாவிடம் தெரிவித்து விட்டால் என்ன

செய்வது என்ற சந்தேகம் வேலுவுக்குத் தோன்றியது. சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் கடிதத்தை எடுத்தான், “ஏ, கடிதமே நான் இப்போது கரும்பு ஒன்றைத்

தின்னப்போகிறேன். இந்தச் சுமையில் எத்தனைகழிகள் இருக்கின்றன என்று சொல் பார்ப்போம்" என்று கடிதத்தைப் பார்த்துக் கேட்டான். கடிதம் எதுவும் பேசவில்லை.

"இதென்ன? கடிதம் விவரம் சொல்லும் என்றாரே! இப்போது கேட்டதற்கு பதிலே சொல்ல வில்லையே!” என்றெண்ணிய வேலு கரும்புக்கழி ஒன்றை எடுத்துக் கடிக்கலானான். மற்றொரு கரும்பையும் கடித்து சாற்றை உறிஞ்சியபின்பே அவனுடைய தாகம் தணிந்தது.

வேலு சுறுசுறுப்படைந்து கிராமத்தை அடைந்து சுப்பையாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவரிடம் கரும்புக் கழிகளையும், பண்ணையார் கொடுத்த கடிதத்தையும் தந்தான். சுப்பையா கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு சுமையிலிருந்த கழிகளை எண்ணிப் பார்த்தார்.

இருபத்தைந்துக்கு பதிலாக இருபத்திமூன்று கரும்புகளே சுமையில் இருந்தன. “வேலு!, இரண்டு கழிகள் குறைவாக இருக்கிறதே" என்றார்.

"உங்களுக்கு இந்தக் கடிதம் பதில் சொல்லியதா?" என்றான்.

"வேலு! படிக்கத் தெரிந்தால் கடிதம் விவரம் சொல்லும். உனக்குத்தான் படிக்கத் தெரியாதே. அதனால் எதுவும் சொல்லவில்லை" என்றார் சுப்பையா.

வேலு தான் இரண்டு கரும்புகளைத் தின்றதை ஒப்புக்கொண்டான். சுப்பையா அவனை மன்னித்து "இனியாவது படிப்பதற்கு முயற்சிசெய்" என்று கூறினார்.

இன்றைய செய்திகள்

12.02.2024

*செலவினங்களை குறைக்க 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்பைஸ் ஜெட் விமானம்.

*வரும் 15ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

*மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; சபாநாயகர் அப்பாவு.

*ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

*ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளுக்கு 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

*19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

Today's Headlines

*SpiceJet lays off 1400 employees to cut costs

 *Legislative Session will last till 15th -  Speaker Appavu informed.

 *All measures will be taken to prevent construction of Meghadahu Dam –  Speaker Appavu.

 * Motorists are suffering due to heat recorded above 100 degrees in Erode.

 *Secretary of Drinking Water Supply Department of Central Government has expressed appreciation for providing 100% drinking water connection to government schools in Tamil Nadu under the Jal Jeevan initiative.

 *India lost the Under-19 World Cup final against Australia by 79 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News