Join THAMIZHKADAL WhatsApp Groups
தாதாசாகெப் பால்கே |
திருக்குறள்:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
விளக்கம்:
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே. --மார்டின் லூதர் கிங்
பொது அறிவு :
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பசலை கீரை : பசலைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
பிப்ரவரி 16
தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவுநாள்
அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது
நீதிக்கதை
குதிரையிடம் பேசினார்...!
இராமலிங்க வள்ளலார், ஜமீன்தார் ஒருவரின் இல்லத்தில் சொற்பொழிவு செய்வதற்காக அழைக்கப்பட்டார். அவரை அழைத்துப் போவதற்காக ஜமீன்தாரே குதிரை வண்டியில் வந்தார். வள்ளலாரும் ஏறிக் கொண்டதும் குதிரை வண்டி கிளம்பியது. குதிரை சற்று வயதான குதிரை. எனவே மெதுவாகவே ஓடியது.
"நேரமாகி விட்டது. குதிரையைத் தட்டி ஓட்டு” என்று ஜமீன்தார் கூறியதும் வண்டியோட்டி கையிலிருந்த சாட்டையினால் குதிரையின்மீது அடித்து விரட்டினான். அடித்து அடித்து குதிரை வேகமாக ஓடுமாறு செய்தான்.
ஜமீன்தார் அறியாதவாறு வள்ளலார் குதிரை படும் துன்பத்தைக் கண்டு கண்கலங்கினார். அவருடைய மனம் மிகுந்த வேதனையடைந்தது.
குதிரை மூச்சிரைக்க ஓடி ஓடி ஜமீன்தாரின் மாளிகையின் முன்பு நின்றது. ஜமீன்தார் "உள்ளே வாருங்கள்" என்று வள்ளலாரைப் பார்த்துக் கூறிவிட்டு மடமடவென்று மாளிகையினுள்ளே சென்று விட்டார். இராமலிங்க வள்ளலாரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதா என்பதை கவனிக்க வேகமாக உள்ளே சென்று விட்டார். சற்று நேரம் கழிந்ததும், வள்ளலார் ஏன் உள்ளே வரவில்லை என்று எண்ணி, அவரைத் தேடி வாயிலுக்கு வந்தார்.
வாயிலில் அவரைக் காணவில்லை. எங்கே போயிருப்பார்? என்று தேடினார். வள்ளலாரின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்கும் ஆவலுடன் ஊர் மக்கள் அனைவரும் மாளிகையி னுள்ளே திரண்டிருந்தார்கள். நேரமோ கடந்து கொண்டிருந்தது. ஓரிரு வேலையாட்களை அனுப்பி நான்கு திசைகளிலும் தேடச் சொன்னார்.
அப்போது, வண்டியோட்டி ஜமீன்தாரிடம் வந்து "நீங்க தேடுபவர், பின்னால் வண்டி லாயத்தில் இருக்கிறார்" என்றான்.
உடனே ஜமீன்தார் பரபரப்புடன் அங்கே சென்றார். வள்ளலாருக்கு வண்டி லாயத்தில் என்ன வேலை? என்று ஜமீன்தார் வியந்தார். அவருடன் வேறு பலரும் லாயத்திற்குச் சென்றார்கள்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி, நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.
"நான் பாவி. என்னால் தானே உனக்கு அடி கிடைத்தது. என்னை மன்னித்து விடு. என்னை மன்னித்து விடு" என்று கூறிய வண்ணம் குதிரையைத் தடவியபடியே வள்ளலார் கண்ணீர் சொறிந்தார். குதிரையின் அருகில் நின்றபடியே.
இக்காட்சியைக் கண்ட ஜமீன்தார் ஓடிவந்து வள்ளலாரின் கால்களில் விழுந்து வணங்கினார்.
"நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும். வாயில்லாப் பிராணியை இனி வதைக்க மாட்டேன்" என்று கண்ணீருடன் கதறினார்.
"அருட்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள."
(திருக்குறள். அருள் உடைமை)
"உயிர்களிடத்தில் இரக்கம் காட்டும் அருளாகிய செல்வமே உயர்ந்த செல்வமாகும். பொருள் என்கிற செல்வம் அற்பர்களிடம் கூட இருக்கும்" என்ற குறள் நீதி ஜமீன்தாரின் நினைவில் வந்தது. அந்த நீதியை அவர் உணர்ந்தார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment