Join THAMIZHKADAL WhatsApp Groups
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பிப்.17-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வேலூர், வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பிப்.17-ம் தேதி ( சனிக்கிழமை ) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற் பயிற்சி, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் நுட்பக் கல்வி, செவிலியர், பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ போன்ற பல்வேறு கல்வித் தகுதியுடைய வேலை இல்லாதவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் 17-ம் தேதி வேலூரில் நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரம் தேவைப் படுவோர், 0416-2290042, 9499055896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment