Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 12, 2024

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்தில் 2,104 காலிப்பணியிடங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தவிபொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்ட அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 2,104 பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் (மற்றும்) குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

பணியிடம்காலியிடங்கள் எண்ணிக்கை
Assistant Engineer
(Corporation/GCC)
194
Assistant Engineer
(Civil/Mechanical)
145
Assistant Engineer
(Municipality/TP)
80
Assistant Engineer (Civil)58
Assistant Engineer
(Mechanical)
14
Assistant Engineer
(Electrical)
71
Assistant Engineer (Planning) (Corporation/GCC)156
Town Planning Officer Grade II / Assistant Engineer (Planning) (Municipality)12
Junior Engineer24
Technical Assistant (Corporation/GCC)257
Draughtsman (Corporation/GCC)46
Draughtsman (Municipality)130
Overseer (Municipality/TP)92
Town Planning Inspector / Junior Engineer (Planning) (Municipality/TP)102
Work Inspector (Municipality/TP)367
Sanitary Inspector (Corporation / GCC & Municipality)356
மொத்தம்2104

இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேர்வு முறை:

இப்பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. அனைத்து தேர்வு முறைகளும் அரசாணையின் படி, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை மூலம் மேற்கொள்ளப்படும். விருப்பமுள்ளவர்கள் https://tnmaws.ucanapply.com/ என்ற இணைய முகவரியில் 09.02.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.


ஒவ்வொரு காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

MUNICIPAL ADMINISTRATION & WATER SUPPLY DEPARTMENT OFFICIAL NOTIFICATION

விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News