Join THAMIZHKADAL WhatsApp Groups
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
விளக்கம்:
இரண்டொழுக்க பண்புகள் :
2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி
பொன்மொழி :
இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது. --ஜார்ஜ் சாண்ட்
பொது அறிவு :
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கானாவாழை : இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது.. அதாவது ரத்த மூலத்தையே குணமாக்கக்கூடிய அளவுக்கு குளிர்ச்சி வாய்ந்தது என்கிறார்கள்.. இந்த கீரையுடன் துத்தி இலைகளையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலே ரத்த மூலம் குணமாகுமாம்.. சிறுநீர் எரிச்சலும் தணிந்துவிடும். உடலிலுள்ள சூட்டை அகற்றுவதுடன், தீக்காயம்வரை மொத்தத்தையும் போக்கக்கூடியது.
பிப்ரவரி 22
நீதிக்கத
குரு ஒருவருக்கு, ஒரு தனவந்தர்
பசுவைத் தானமாக அளித்தார். அந்தப் பசுவின்
கொம்புகளின் முனையில் தங்கத்தால் கொப்பி அணிவிக்கப்பட்டிருந்தது. பசுவின்மீது, மிகவும் விலையுயர்ந்த, அழகிய வேலைப்பாடு நிறைந்த போர்வையைப் போர்த்தி, தானமாக அளித்தார். தானம் பெற்ற குருவும் மிக்க மகிழ்ச்சியடைந்தார். பசுவின் தலைக்கயிற்றைக் கைகளால் பிடித்துக் கொண்டு, தம்முடைய வசிப்பிடம் நோக்கி நடந்தார். அவருடைய வீடு சற்று தொலைவில் இருந்தது. நடந்து செல்லும் போது, நான்கு திருடர்கள் பசுவின் கொம்புகளில் உள்ள தங்கக் தொப்பிகளைப் பார்த்தார்கள். எப்படியாவது பசுவைக் கவர்ந்து செல்ல வேண்டுமென்று அவர்கள் நால்வரும் திட்டமிட்டார்கள்.
குருபசுவைக் கையில் பிடித்தபடியே நடந்து சென்றபோது ஒரு திருடன் அவருக்கு எதிரில் வந்தான்.
"ஐயயோ, ஏனய்யா புலியைக் கையில் பிடித்துக் கொண்டு போகின்றீர்? உமக்குப் பைத்தியமா என்று கேட்டுவிட்டு பயப்படுவது போல நடித்தான். “ஏனப்பா, இது புலி இல்லை பசு. இது கூடவா உனக்குத் தெரியவில்லை?” என்று குரு சிரித்துக் கொண்டே நடக்கலானார்.
சற்றுதூரம் சென்றதும் மற்றொரு திருடன் அவருக்கு எதிரில் வந்தான். குருவுக்கு அருகில் வந்து விட்டு, பிறகு சட்டென்று சில அடிகள் பின்னால் சென்றான். பின்பு, "இதென்ன அநியாயம்? நாட்டில் ஜனங்கள் நடக்கும் பாதையில் புலியுடன் போகிறீர்களே, புலி யாரையாவது அடித்து விட்டால் என்ன ஆகும்?" என்று திருடன் கேட்டதும், குரு தாம் கையில் பிடித்திருந்த பசுவை ஏற இறங்கப் பார்த்தார்.
"நீ என்ன பார்வை இல்லாதவனா? பசு மாட்டைப்போய் புலி என்கிறாயே, போ, போ உன் வழியைப் பார்த்துக் கொண்டு" என்று பதிலளித்து விட்டு நடந்தார்.
"நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், பிறகு உன்பாடு" என்று கூறிவிட்டு திருடன் சென்று விட்டான்.
குரு, பசுவை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார். பசுவைப் போய் புலி என்று ஏன் சொன்னார்கள் என்று யோசித்தபடியே நடந்தார்.
எதிரில் மூன்றாவது திருடன் வந்தான் “புலி, புலி ஓடி வாருங்கள். புலியை ஊருக்குள் அழைத்துப் போகிறான்" என்று திருடன் கூச்சலிட்டதும் குருவிற்கு சந்தேகம் வந்தது. பயம் தோன்றியதும், பசுவின் தலைக்கயிற்றை விட்டுவிட்டு, விலகி நடக்க ஆரம்பித்தார்.
நான்காவது திருடன் அப்போது அவர் முன்னால் வந்து "ஐயா, உங்கள் பின்னால் புலி ஒன்று வருகிறது. அது உங்களைக் கடித்துத் தின்று விடலாம். வாருங்கள் ஓடலாம்" என்று கூறியதும் குரு பசுவை, புலி என்றே நம்பி விட்டார். உடனே வீட்டை நோக்கி ஓடலானார்.
அவர் ஓடியபின்பு நான்கு திருடர்களும் பசுவை ஒட்டிக் கொண்டு தங்கள் இருப்பிடம் சேர்ந்தார்கள்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
யார் எதைச் சொன்னாலும் அதிலுள்ள
உண்மையை அறிந்து கொள்வதுதான் அறிவுடைமையாகும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment