Join THAMIZHKADAL WhatsApp Groups
ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு தெற்கு ரயில்வேயில்ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2860 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2024
காலியிடங்களின் விவரம்
Fitter, Turner, Welder, Welder (G&E), Machinist, Electrician, Painter, Electronic Mechanic, Carpenter, Wireman, Plumber, Diesel Mechanic, COPA உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மண்டலம் மற்றும் பிரிவு வாரியான காலியிடங்களைத் தெரிந்துக் கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 6000 - 7000
வயது தகுதி: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2024
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
No comments:
Post a Comment