Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 25, 2024

சிதைக்க போகும் புதன்.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை மணி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் கல்வி, அறிவு, சுய அறிவு, பகுத்தறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

புதன் பகவான் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவானின் நட்பு கிரகமான சனி பகவானின் சொந்த ராசியாக விளங்கக்கூடிய மகர ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார்.

இவர் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார். ஒரு மாத காலம் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமித்தார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்ற ஊழியர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் மிகவும் கவனத்தை செலுத்தி நடத்த வேண்டும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமிக்கின்றார். இதனால் உங்களுக்கு குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் மிகவும் சிக்கலான சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கூட்டு வணிக முயற்சிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். வேலை செய்யும் அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த இடமாக இருந்தாலும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாக உள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகிறார். இதனால் உங்களுக்கு பணம் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News