Thursday, February 29, 2024

சென்ட்ரல் வங்கியில் வேலை.. 3 ஆயிரம் பணியிடங்கள்.. டிகிரி முடிச்சிருந்தால் போதும்.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 3 ஆயிரம் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் அப்ரண்டீஸ் டிரெயினிங் (Apprentice Posts) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.


கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 3. 10. 2020 க்கு பிறகு பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதுபற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.04.1996 முதல் 31. 03. 2004க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எனினும், எஸ்.சி / எஸ்.டி /ஒபிசி / மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. அதாவது, எஸ்சி / எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?: ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். சம்பளமாக ரூ.15,000 - நிர்ணயிக்கப்படும். எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வில் கொள்குறி வகையில் இடம் பெற்றிருக்கும். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். உள்ளூர் மொழியை ஏதேனும் ஒரு பாடமாக எடுத்து படித்தற்காக சான்று வழங்க வேண்டும். அதாவது, 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் உள்ளூர் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் கடைசி நாள் வரும் 06.03.2024 ஆகும். அப்ரெண்ட்டீஸ் தளத்தில் லாக் இன் செய்து பணியாளர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News