நுரையீரல் என்பது நம் உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். எனவே அதன் ஆரோக்கியம் மிக மிக அவசியமானது.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முறையான உடற்பயிற்சி மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுவது மட்டுமில்லாமல் சில நல்ல உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்களது நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி அதன் செயல்பாடு அதிகரிக்கும். சரி வாருங்கள் இந்த பதிவில் நுரையீரலை சுத்தம் செய்யும் ஆறு அற்புத உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி: இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்பு இருப்பதால், அது நுரையீரலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதனால் சுவாசப் பாதைத் தொற்று, ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கிரீன் டீ: கிரீன் டீ தொடர்ந்து பருகுவதால் நுரையீரல் வீக்கம் குறைந்து, சுவாச செயல்பாடு மேம்படும் என சொல்லப்படுகிறது. மேலும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் எனப்படும் ஒரு வகை நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், கிரீன் டீ உதவுகிறது.
மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற ரசாயனம் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இது நம் நுரையீரல் திசுக்களை பாதுகாத்து, நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
சிட்ரஸ் பழங்கள்: விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போற்ற பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நுரையீரல் வீக்கம் குறையும்.
பச்சை இலைக் காய்கறிகள்: கீரைகளைத்தான் பச்சை இலைக் காய்கறிகள் எனச் சொல்வார்கள். இவற்றில் நுரையீரல் கழிவுகளை அகற்றும் குளோரோஃபில் அதிகமாக இருப்பதால், கீரைகளை சாப்பிடுவது நுரையீரலுக்கு மிகவும் நல்லதாகும்.
மாதுளை: மாதுளையில் Punicalagin எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து அதில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது
இவை தவிர பூண்டு, பெர்ரி பழங்கள், நட்ஸ் போன்றவற்றிலும், நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொண்டு, நுரையீரலை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
No comments:
Post a Comment